மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மொகாலியில் இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் டுவைன் ஸ்மித், மோகித் சர்மா நீக்கப்பட்டு மைக்கேல் ஹசி, நெஹ்ரா இடம்பிடித்தனர்.
பஞ்சாப் அணிக்கு சகா (15) ஏமாற்றினார். நெஹ்ரா பந்தில் பெய்லி (12) சிக்கினார். வோரா (4), குர்கீரத் சிங் (15) நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் (6), மில்லர் (11) விரைவில் கிளம்பினர். அக்சர் படேல் 32 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. ரிஷி தவான் (25), ஹென்டிரிக்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
எட்டி விடும் இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி (1), பிரண்டன் மெக்கலம் (6) விரைவில் திரும்பினர். சிறப்பாக செயல்பட்ட டுபிளசி அரை (55) சதம் அடித்தார். சென்னை அணி 16.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (41), தோனி (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
0 comments:
Post a Comment