இதுபோல வேறெந்த ஐபிஎல்-லிலும் நடந்ததில்லை. ஐபிஎல் லீக் போட்டிகள் முடிய இன்னும் இரண்டு நாள்கள்தான் உள்ளன. இன்னமும் 4 போட்டிகள் தான் மீதமுள்ளன. ஆனால் இதுவரை சென்னையைத் தவிர வேறெந்த அணியும் ப்ளேஆஃப்புகுத் தகுதி பெறவில்லை!
நேற்று, ஹைதராபாத்தை பெங்களுரு தோற்கடித்ததன் மூலம் நிலைமை மேலும் சிக்கலாகிவிட்டது.
கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 5 அணிகளும் மீதமுள்ள 3 இடங்களுக்குப் போட்டியிடுகின்றன. சென்னை அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.
கொல்கத்தா (15 புள்ளிகள்) - ராஜஸ்தான் (14)
இன்று நடக்கும் சென்னை (16) - பஞ்சாப் (6) போட்டி, சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் எத்தனையாவது இடத்தைப் பிடிக்கும் என்கிற முடிவை எட்டவே உதவும். ஆனால் அடுத்து நடக்கும் மூன்று போட்டிகளும் ப்ளேஆஃப்பில் இடம்பெறப் போகிற 3 அணிகளை நிர்ணயிக்க உள்ளன.
கொல்கத்தா - ராஜஸ்தான் போட்டியில் கொல்கத்தா ஜெயித்தால் ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். தோற்றால், 15 புள்ளிகளைக் கொண்டிருப்பதால் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறவும் வாய்ப்புண்டு.
ராஜஸ்தான் வெற்றி பெற்றால், பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி பெற வேண்டும்.
பெங்களூரு (15) - டெல்லி (10)
இந்தப் போட்டி பெங்களூருக்கு மட்டும்தான் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. டெல்லி ஏற்கெனவே ப்ளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது. இந்தப் போட்டியில் பெங்களூரு தோற்றுவிட்டால் அவ்வளவுதான். அதற்கேற்றாற்போல கொல்கத்தாவும் அதன் கடைசிப் போட்டியில் தோற்றிருக்கவேண்டும். ரன்ரேட் அடிப்படையில் இரண்டில் ஒன்று தகுதி பெறும்.
முந்தைய மேட்சில் ராஜஸ்தான் வெற்றி பெற்று இதில் டெல்லி வெற்றி பெற்றுவிட்டால் ராஜஸ்தான் தகுதி பெற்றுவிடும்.
ஹைதராபாத் (14) - மும்பை (14)
நாக்அவுட். ஐபிஎல் லீக்கின் கடைசிப் போட்டிக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இரண்டு அணிகளுமே ப்ளேஆஃப்புக்குப் போட்டி போடுகின்றன. வெற்றி பெறும் அணி, அடுத்தக் கட்டத்துக்குத் தேர்வு பெறும்
0 comments:
Post a Comment