தேவையான பொருட்கள்:
♥ கிராம் பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
♥ துருவிய தேங்காய் - 3/4 கப்
♥ முட்டை - 1
♥ பச்சை மிளகாய் - 7 (நறுக்கியது)
♥ பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
♥ கசகசா - 2 டீஸ்பூன்
♥ சோம்பு - 1 டீஸ்பூன்
♥ பட்டை - 1 இன்ச்
♥ இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது)
♥ பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது)
♥ மஞ்சள் தூள் - தேவையான அளவு
♥ உப்பு - தேவையான அளவு
♥ எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை ரெடி!!!
0 comments:
Post a Comment